வா பா வா சீர்மாகரி
ஓம்
வானுலகு மண்ணுலகும் வாழமறை வாழப்
பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க
ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய்
ஆனைமுக நைப்பரவி அஞ்சலிசெய் கிற்பாம்.
ஓம்
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ யெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.
ஓம்
வாக்குண்டாம் நல்ல் மன்முண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனிதும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
ஓம்
சீர் மாகரியின் செழு மமுகவா
தேர் மமகுடந் திகழ் அம்பகவா
கார் ஆகு இணைகழல் பாவியவா
பாரார் சிகரைபதி மேவியவா!
No comments:
Post a Comment